அவன் காட்டிய திசையில்.. நின்றிருந்தான் இளம் சிறுவன்
"நல்லா பண்ணுவான் சார்"
"இல்ல.. பரவால்ல அப்புறம் வரேன் " நகர்ந்தேன்...
கடைசி கட்ட நேர்காணல் .. ஒரு வேளை சிறுவன் சொதப்பிவிட்டால் ?
"ஐயம் சாரி மிஸ்டர் ... உங்க ஸ்கோர் எல்லாமே நல்லா இருக்கு.. ஆனா எங்க எம்.டி இப்ப அனுபவம் இருக்கறவங்க தான் வேணும்னு சொல்லிட்டாரு.. அதனால.."
அந்த சிறுவனின் முகம் என் கண்முன் தோன்றி என்னை பரிதாபமாக பார்த்தது!!
No comments:
Post a Comment