Friday, November 25, 2011

மயக்கம்!


நண்பனின் நச்சரிப்பை தாங்க முடியாமல் சென்றடைந்தேன்!

ஊரின் மிக  பிரம்மாண்டமான அரங்கம்

ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட இருக்கைகள்...

அதையும் தாண்டி நின்றிருந்தது மக்கள் கூட்டம்...

திரும்பிய திசையெல்லாம் வெள்ளை சீருடையில் இளம் வயது பெண்கள்

பெயருக்கு சில வாலிபர்கள்... அதில் என் நண்பனும் ஒருவன்!!

அத்தனை பேர் இருப்பதற்கான சுவடே இல்லாமல் ஒரு மயான அமைதி...

சட்டென்று ஒரு மனம் வருடும் மெல்லிய இசை ...

வெள்ளை நிற உடையில் ஒரு உருவம் மேடையில் தெரிய அனைவரிடமும் ஒரு ஆவல் ...

ஒரு மணி நேரம்.. நுனி நாக்கு ஆங்கிலத்தில்..

எங்கோ கேட்டவை போலிருந்தது..இருப்பினும் கை தட்டினேன்.. ஆங்கிலத்திற்கு!

பேருந்தில் அமர்ந்ததும் சட்டென்று உரைத்தது

கைபேசியில் அழைத்து நண்பனிடம் சொன்னேன்

"டேய்.. அவன் பேசினது கீதையும் குறளும்"

"அப்படினா ?" என்று அவன் கேட்டதும் புரிந்தது

நாம் எப்படி மயங்கி இருக்கிறோம் என்பது !!!

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?


பெண் சுதந்திரம்..பெண் சுதந்திரம்..பெண் சுதந்திரம்.. இன்னும் இந்த குரல் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது..

ஆண் வர்கத்து அடிமைகள் சார்பாக இதை சமர்ப்பிக்கிறேன் !

குறிப்பு : இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.. இது போன்று இருக்கும் அனைவரையும் திருத்தி ஆண் சமுதாயத்திற்கு பாடுபட செய்வதே இதன் நோக்கம் !!!



நேர்காணலில்..

பெண்ணிடம் : நைட் ஷிப்ட் எல்லாம் வரணுமே உங்களால முடியுமா ?

ஆணிடம்  : கண்டிப்பா நாலு மாசம் நைட் ஷிப்ட் வரணும் !


வேலையில் சேர்ந்த முதல் நாளில்..

பெண்ணிடம் : ஓகே.. முதல் ரெண்டு நாள் டிரைனிங் நான் எடுக்கறேன்.. அப்புறம் டீம் கூட போய் உக்காருங்க

ஆணிடம்  : ஓகே.. நீங்க அவரோட உக்காருங்க .. கவனமா கேட்டுகொங்க... எதாவது சந்தேகம்னா என்கிட்டே கேளுங்க !


ஆறு மாத முடிவில்..

பெண்ணிடம் : ஆறே மாசத்துல நல்ல பிக்கப் பண்ணிட்டிங்க.. வெரி குட்.. இதையே கன்டிநிவ் பண்ணுங்க

ஆணிடம்  : ஆறு மாசம்ன்றது கம்மியான டைம் உங்கள பத்தி கமென்ட் பண்ண.. இதுவரைக்கும் நல்லா  பன்னிருக்கிங்க..இன்னும் நல்லா பண்ண ஸ்கோப் இருக்கு


எட்டு மாதங்களுக்குப் பிறகு..

பெண்ணிடம் : மீன் குழம்பு பிரமாதம்.. இனிமேல் எடுத்துட்டு வந்தா கட்டாயம் சொல்லுங்க

ஆணிடம்  : நீங்க ரொம்ப நேரமா சீட்ல இல்லையே.. சாப்புட போயிட்டு வர இவ்வளோ நேரமா ?


வேலையில் பெரிய தவறொன்று நடக்கும் சமயம்..

பெண்ணிடம் : அடடா.. இத நம்ம பாத்துருக்கணும்..சரி இனிமேல் கவனமா இருங்க

ஆணிடம்  : என்னங்க.. பத்து மாசம் ஆச்சு..இதெல்லாம் நிச்சயம் பாத்துருக்கணும் ..."பச்"


(தற்போதைக்கு இது போதும் என்று கருதி முடித்துக்கொள்கிறேன்...)

குறிப்பு 1) : மேற்ச்சொன்னவை அனைத்தும் கலரான பிகர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. மற்ற பெண்கள் வழக்கம் போல் சுதந்திர முழக்கம் எழுப்பலாம்..அதில் ஓரளவு நியாயம் இருக்கிறது.
   
குறிப்பு 2) : ஒரு வேளை அதிகாரி பெண்ணாக இருந்தால் "பெண்" கமெண்ட்ஸ் "ஆணுக்கும்", "ஆண்" கமெண்ட்ஸ் "பெண்ணுக்கும்" பொருந்துமா என்று எனக்கு தெரியவில்லை !!

ஏழாம் அறிவு


தமிழர்களுக்கே தெரியாத ஆனால் உலகறிந்த ஒரு தமிழனை பற்றி ஒரு படம். தமிழ் தமிழ் என்று அடித்துக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கேனும் தெரிந்திருக்குமோ என்னவோ ! இந்த முயற்சிக்காகவே முருகதாசுக்கு நன்றியை தெரிவிக்கலாம்.

படம் வெளிவந்து பல நாட்கள் கழித்து சென்றதால் அலைமோதும் கூட்டம், ரசிகர் மன்ற விசில்கள் என்று எவ்வித தொல்லையும் இன்றி நிம்மதியாக பார்க்க முடிந்தது

போதிதர்மனைப் பற்றிய முதல் சில நிமிடங்கள் நிச்சயம் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. இப்படியும் ஒரு மனிதனா என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே படம் சென்னைக்கு பயணிக்க... ஆரம்பமாகிறது மசாலா

இவ்வளவு பெரிய முயற்சியை கையில் எடுத்தும் தமிழ் ரசிகர்களின் மேல் நம்பிக்கை இல்லாமல் தேவையற்ற இடங்களில் பாடல்களை திணித்து இருப்பது சற்றே நெருடலாக இருக்கின்றது

அதிலும் முருகதாஸின் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று கமலின் மகளான ஸ்ருதியை நாயகியக்கியது.. கமல் பெண் என்பதாலோ என்னமோ பாடல் காட்சிகளில் சூர்யாவிடம் எப்போதும் இருக்கும் துள்ளல் இல்லை.. முகத்தில் காதல் பார்வை என்பதற்கான அடையாளமே இல்லை!

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் மிகவும் சுமாராக இருப்பது ஒரு புறம் இருக்க பாடல்களை படமாக்கியிருக்கும் விதம் அதைவிட சுமார் ரகம்.. அதிக இடங்களில் "ஸ்லோ மோஷன்" நடனங்கள் இதற்கு சாட்சி!

தமிழை பற்றி பெருமையாக பேசவேண்டிய இடத்தில் ஸ்ருதியின் உச்சரிப்பு சற்றே சிரிக்கவைக்கின்றது!

பீட்டர் ஹெய்னின் வழக்கமான நூறு பேரை அடிப்பது போன்ற சண்டை காட்சிகள் இல்லாதது மனதுக்கு இதமான விஷயங்களில் ஒன்று.. வில்லனின் பார்வையில் ஒவ்வொரு வண்டியாக சீறிப்பாய்ந்து அடிக்கும் காட்சி சற்றே நீளமாக இருப்பது போல் தோன்றுகிறது. எல்லா படங்களும் எந்திரன் ஆகா முடியாது.. எல்லா ஹீரோக்களும் சூப்பர்ஸ்டார் ஆகா முடியாதல்லவா!

அண்டை நாட்டின் மூலம் இப்படி ஒரு ஆபத்து இருக்கும்பொழுது அதை கல்லூரி மாணவர்கள் அரசிடம் தெரியப்படுத்தாமல் தனித்து செயல்படுவது ஏதோ நாட்டில் அனைத்து அதிகாரிகளும் கெட்டவர்கள் என்று சித்தரிக்கும் விதத்தில் உள்ளது. அதுவும் போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து அழித்துவிட்டு 12 நாட்கள் வில்லன் வெளியே திரிவது அபத்தமாக உள்ளது!

இருப்பினும்... சூர்யா.. கிடைத்த இடங்களில் ஜொலிக்கின்றார்.. அதுவே இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம்

ஏழாம் அறிவு ஒரு தமிழனின் அறிவு என்ற செய்தி மிகவும் முக்கியமான ஒன்று..

அனுபவம்


"வாங்க சார்.. அங்க உக்காருங்க"

அவன் காட்டிய திசையில்.. நின்றிருந்தான் இளம் சிறுவன்

"நல்லா பண்ணுவான் சார்"

"இல்ல.. பரவால்ல அப்புறம் வரேன் " நகர்ந்தேன்...

கடைசி கட்ட நேர்காணல் .. ஒரு வேளை சிறுவன் சொதப்பிவிட்டால் ?

"ஐயம் சாரி மிஸ்டர் ... உங்க ஸ்கோர் எல்லாமே நல்லா இருக்கு.. ஆனா எங்க எம்.டி இப்ப அனுபவம் இருக்கறவங்க தான் வேணும்னு சொல்லிட்டாரு.. அதனால.."

அந்த சிறுவனின் முகம் என் கண்முன் தோன்றி என்னை பரிதாபமாக பார்த்தது!!

டாடியும் - தாடியும்


"சாமி.. எங்க அப்பா எப்பவும் தாடி வளர்த்து இருக்கணும்"..

குழந்தையின் வேண்டுதல் புரியவில்லை பெற்றவனுக்கு..

"ஏம்மா"

"தாடி வெச்சா தான் நீங்க வீட்டுக்கு சீக்கிரம் வரிங்க.. என் கூட விளையாடுரிங்க.. அம்மாவ அடிக்காம இருக்கீங்க"

தூரத்தில் ஐயப்பன் ஏளனமாய் சிரித்துக்கொண்டிருந்தார்!

நியாயமா இது ராகுல் ?


தந்தையை போல சானக்கியராக இல்லையென்றாலும் பரவாயில்லை.. இந்திய அரசியலில் ஒரு புரட்சியை செய்யவில்லைஎன்றாலும் பரவாயில்லை.. இந்திய பெண்ணை மனக்கவில்லைஎன்றாலும் பரவாயில்லை ...

தேர்தல் வரும்போது மட்டும் கிராமத்திற்கு நடந்து செல்வதும், ஏழை மக்களின் தோள் மீது கை வைத்து பேசுவதும் ... குடிசை வீட்டில் சப்பாத்தி சாப்பிடுவதும் ... போதும் உம் குழந்தைதனமான் அரசியல்...

நீங்கள் படித்தது வெளிநாட்டில் இருக்கலாம்... அதற்காக இந்திய மண்ணில் இல்லாத மருத்துவரா ? ஏதேதோ நாட்டில் இருந்து இங்கு வந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்க ...

உங்கள் தாய் சோனியாகாந்தி உடல் நலம் குன்றியபோது உங்கள் குடும்பம் தேர்ந்தெடுத்து ஒரு அமெரிக்க மருத்துவமனையை!! தில்லியில் இல்லாத மருத்துவரா ? சென்னையில் இல்லாத புற்றுநோய் மருத்துவரா ? இதையெல்லாம் விட்டு உங்கள் குடும்பம் பறந்து சென்றும்

உங்கள் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்தது ஒரு இந்திய மருத்துவரல்லவா ? இதன் மூலம் நாட்டு மக்களுக்கு ஒன்றை புரிய வைத்துவிட்டீர்கள்...நீங்களும் உங்கள் குடும்பமும் என்றுமே இந்தியர்கள் ஆக விரும்பவில்லை என்று !!

பொருளாதார மேதையை பொம்மை போல் ஆட்டுவிக்கும் உம்மால் இந்திய அரசியலில் எதையும் செய்ய முடியாது என்பது நிச்சயம்....

Piracy and its truth


I came across a news couple of days ago that the film distributors in the city met with the theatre owners and discussed on the possibility of reduction in ticket prices.. dont know how many multiplex's will agree to this.. but still.. this should start the proceedings against the piracy..

take an example of a family consisting of parents and two kids.. if they are panning for a movie... the average ticket cost is Rs.120/person.. so thats close to 500 rupees.. then comes the interval snacks n coffee... even if they end up purchasing only few, average cost would be around 150.. add a restaurant / auto expenses after the movie.. its one thousand rupees... for a single movie... and the best part is u dont like the movie!! this is the case with most of the middle class family... and according to them a one time investment on a dvd player worth a thousand rupees is not a big deal... they are absolutely fine to spend just 50 rupees to buy a dvd and watch the latest movie at home... with home made snacks... and food... so piracy has become an integral part just because of the cost of the theatres..
on the other hand... this logic does not apply to multiplex operators like sathyam/inox/pvr... where even if the ticket rates are fixed at 200/person.. u will still find house full sign when u try to book it onine... adding to that.. a coffee will start at 50 rupees.. and u will still find the counter busy all the time... so places like these are for people who really do not know what to do with the money they have / who are always attracted towards big names...
the issue of survival is only for the local theatres.. a non a/c theatre in my area used to screen many new movies and the ticket price will be 40 rupees.. over a period of time.. by seeing the rise of multiplexes, it was converted into an airconditioned theatre with full of speakers which they claimed are for dts effect.. suddenly the price of tickets became 100 rupees for new releases for the first two weeks... now a rational human being will think in two ways.. one..whether to spend so much for a local theatre which does not have any hi fi settings like multiplexes.. is waste and decide to spend 20 rupees more and goes to the multiplex... and the other.. settle down for pirated cd which is much cheaper...

so this is an issue which is affecting the small and local theatres and they need to realise on where they are and where they ought to be!! just not blame piracy and those who buy them at the market!!!

Do you know how they get everything??


Whenever a disaster happens in the name of terror attack... fingers are always pointed towards intelligence failure.. at the end of the investigation, police would come to know that the anti social elements infact had a proper driving license / ration card / even passport ... and they planned well in advance etc... etc... You go to passport office and will come to know the lengthy procedures that needs to be followed which includes police verification/documents and so on.. but how do these terrorists get ID's easily?? i think i know the answer!!!
Couple of months ago, when i went to a nationalised bank for opening a savings bank account.. i was told to produce few proofs.. unfortunately i did not have one of them and i was confused... to my surprise i got a response from the manager... "no problem.. you just get a letter from a notary and we will have it opened immediately".. i went to the high court and asked a young advocate who was near the gate... on the procedures for getting a letter from notary.. he gave me an answer instantly.. "do you see a vehicle there? go to them and say you need a letter with these details.. see how much they would charge... if they ask Rs.400 you better go to the back side of this building and you will have few more vehicles... enquire and compare... get it from the cheapest".. i did the same.. compared with three people and got the letter for Rs.300. None of them asked a single question about who am i or what am i doing? their assistants were busy negotiating with the crowd near the vehicle and one person was typing things in  judicial bond papers as dictated by the notary (never know whether they will be genuine advocates!!).. after my letter was prepared.. the advocate pasted his rubber stamp and signature and said "Here it is.. you can use this as a proof for anything...take few copies and use it in future" and started dictating for the next letter!
Now... do you know how they get everything??