Monday, December 26, 2011

தனக்கு வருகையில் தான்...


வங்கக் கடலில் ஒன்றன் பின் ஒன்றாய்

முளைத்த தாழ்வு நிலை

தன் தீவிரத்தை காட்டிக் கொண்டிருக்க

வழி எங்கும் காட்டாற்று வெள்ளம் போல்

ஓடும் நீரில் வண்டிகள் தேங்கிநிற்க

தூரத்தில் ஒரு சப்தம்...பல வாகனங்களுக்குப் பின்னால்...

மழையின் ஓசையையும் தாண்டி அதிரவைக்கும் ஒலி எழுப்பிக் கொண்டிருந்த

வண்டியின் ஜன்னலை திறந்து...

"என்னப்பா ஆச்சு" என்று ஓட்டுனர் கேட்க

"ஓட்டு கேட்க வரப்போ ரோடு போடுரானுங்க

 போட்ட ரோடு ஒரு மழைக்கே தாங்காம ஒடஞ்சு போச்சு..இனி

 அந்த மந்திரியே ஆம்புலன்சுல வந்தாலும் நிக்க வேண்டியதுதான்"

வந்த பதில் செருப்பிலடித்தாற்போல் இருந்தது

உள்ளே நெஞ்சு வழியில் துடித்துக் கொண்டிருந்த

சாலைத்துறை அமைச்சர் பெருமானுக்கு!!!

Monday, December 12, 2011

வயது !!



பேரப்பிள்ளைகளின் அரவணைப்பில்

ஓய்வெடுக்க வேண்டிய வயது...

மார்கழியின் உறை பனியில்

கிழிந்த போர்வையில் உடலை சுற்றி...

நாற்காலியில் முடங்கி இருக்கிறார் ...

அவரிடம் இல்லாத ஒன்றை

மற்றவர்களுக்கு வழங்கும்

தானியங்கி இயந்திரத்தின் அருகில்... காவலனாய்!!

Thursday, December 8, 2011

எங்கே நீ ?


உன் பக்தனாக இருந்த சிறுவனின் உயிரைக் காக்க வந்தாய்...

அவன் தந்தை என்றும் பாராமல் கொடியவனை வதம் செய்தாய்...

உள்ளம் உருகி உன்னை வணங்கியவருக்கு சோதனைகள் பல தந்து...

முடியாமல் போகும் தருணத்தில் காட்சி அளித்து மோட்சம் தந்தாய்...

தம்பிக்கு துரோகம் செய்த அண்ணனை மறைந்திருந்துக் கொன்றாய்...

எதிரே நிற்பது குருவே ஆனாலும் தீயவனுடன் இருந்தால் தவறென்று சொல்லி வீழ்த்தினாய்...

உன் கதைகளை கூறி "தப்பு பண்ணா சாமி கண்ண குத்திடும்" என்று சொல்லி வளர்க்கும் இக்காலத்தில்...

நீ வீற்றிருக்கும் இடத்தில் ஒரு பெண்ணுடன் பூசாரி இருப்பதும்...

உன் கோவில் உண்டியல் உடைத்து பணம் பறிபோகும்போதும்...

உன் பெயரில் கோவில் கட்டி.. தன் பெயரில் பல அடுக்குமாடி கட்டும்போதும்...

கறுப்புச் சட்டை திராவிடன் கைகொட்டி சிரிக்கும்போதும்

"ஏம்பா இவங்கள சாமி கண்ண குத்தல" என்று சிறு பிள்ளை கேட்கும்போதும்...

நினைக்கத்தான் தோன்றுகிறது... நீ எங்கு இருக்கிறாய் என்று !!!

Sunday, December 4, 2011

Kolaveri - Beginning of the end!!


Dhanush's kolaveri has certainly blasted everything to reach more and more heights..leave the regional news channels.. Economic Times talks about it!! CNN talks about it!!

It has hit millions of views in almost all video sharing sites! but the question to be answered is "IS IT REALLY WORTH??"


Probably not.. Tamil Cinema is slowly moving to the good old days where the actors used to do their song sequences.. We had a huge list of such people who were highly trained and talented in music.. The trend was later changed by stalwarts like SPB, YESUDAS, MALAYSIA VASUDEVAN etc.. Ilayaraja was dominating the industry for almost two decades wherein he rotated the hits between these established singers only. ARR changed this trend and brought in new voices.. later on improvised it with multiple voices in a single song.. This idea opened doors for many aspiring and talented singers to enter the industry and it was upto them to take it up further.. However, very few made a cut and sustained in the industry where the others are almost forgotten now.. The current generation is clear.. does not matter how talented you are.. the peak time is very limited.. probably 2 years and make good use of it.


Technology has come into music which allows you to do word by word recording as against the 100% live recordings done by MSV & Raja.. So it becomes all the more easy even for a foreigner to sing in Tamil. Looks like import of singers from Bollywood and Hollywood has increased considerably comparing with actresses.. Coming back, the recent release of Kolaveri has attracted some criticisms also.. Few people say that kids are being spoiled which is not a strong point since kids have many distractions apart from just a song like this. But for people who like, love and live music find it really difficult to understand what the hell is happening in the industry! The so called lyrics are literally a comedy!

You listen to Vikram singing for his movies, Simbu (accepted for his talent) sings for his films, Dhanush SINGS for his films.. and even Santhanam and Kanja karuppu might sing a song for their upcoming movies..


Kolaveri - by all means is a disgrace to musicians... this is just the beginning of the End of an ERA of good music in tamil films.. God Save us!

சொந்தமும் பந்தமும்


மாப்பிள்ளை பார்த்து சொல்லமாட்டர் .. சொந்தத்தினர் கூடும்போது கேட்பர் ...

"எப்போதான் கல்யாண சாப்பாடு போடுவ ?"

பந்தியில் மாப்பிள்ளை வீட்டார் காதுபட பேசுவர்..

"பின்ன.. இவ வயசுக்கு தலை நிறைய முடி இருக்கற மாப்பிள்ளையா கிடைக்கும்!"

சில வருடங்கள் காணாமல் போய்விடுவர்...

பின் இழவு வீட்டில் அழுதபடியே...

"காலாகாலத்துல ஒரு பேரனோ பேத்தியோ பெத்திருந்தா பாத்துட்டு சந்தோஷமா போயிருக்கும்ல அந்த ஜீவன்..."

நடக்க வேண்டியவை நடக்கவில்லை என்று தெரிந்தும்..

கேள்விகள் பல கேட்பர்

சொந்தம் என்ற உரிமையில்  !!!