Monday, December 26, 2011

தனக்கு வருகையில் தான்...


வங்கக் கடலில் ஒன்றன் பின் ஒன்றாய்

முளைத்த தாழ்வு நிலை

தன் தீவிரத்தை காட்டிக் கொண்டிருக்க

வழி எங்கும் காட்டாற்று வெள்ளம் போல்

ஓடும் நீரில் வண்டிகள் தேங்கிநிற்க

தூரத்தில் ஒரு சப்தம்...பல வாகனங்களுக்குப் பின்னால்...

மழையின் ஓசையையும் தாண்டி அதிரவைக்கும் ஒலி எழுப்பிக் கொண்டிருந்த

வண்டியின் ஜன்னலை திறந்து...

"என்னப்பா ஆச்சு" என்று ஓட்டுனர் கேட்க

"ஓட்டு கேட்க வரப்போ ரோடு போடுரானுங்க

 போட்ட ரோடு ஒரு மழைக்கே தாங்காம ஒடஞ்சு போச்சு..இனி

 அந்த மந்திரியே ஆம்புலன்சுல வந்தாலும் நிக்க வேண்டியதுதான்"

வந்த பதில் செருப்பிலடித்தாற்போல் இருந்தது

உள்ளே நெஞ்சு வழியில் துடித்துக் கொண்டிருந்த

சாலைத்துறை அமைச்சர் பெருமானுக்கு!!!

1 comment:

  1. தல அம்மா இப்போ பிளாஸ்டிக் தார் சாலை போட சொல்லிட்டாங்க (:-)

    ReplyDelete