Thursday, December 8, 2011

எங்கே நீ ?


உன் பக்தனாக இருந்த சிறுவனின் உயிரைக் காக்க வந்தாய்...

அவன் தந்தை என்றும் பாராமல் கொடியவனை வதம் செய்தாய்...

உள்ளம் உருகி உன்னை வணங்கியவருக்கு சோதனைகள் பல தந்து...

முடியாமல் போகும் தருணத்தில் காட்சி அளித்து மோட்சம் தந்தாய்...

தம்பிக்கு துரோகம் செய்த அண்ணனை மறைந்திருந்துக் கொன்றாய்...

எதிரே நிற்பது குருவே ஆனாலும் தீயவனுடன் இருந்தால் தவறென்று சொல்லி வீழ்த்தினாய்...

உன் கதைகளை கூறி "தப்பு பண்ணா சாமி கண்ண குத்திடும்" என்று சொல்லி வளர்க்கும் இக்காலத்தில்...

நீ வீற்றிருக்கும் இடத்தில் ஒரு பெண்ணுடன் பூசாரி இருப்பதும்...

உன் கோவில் உண்டியல் உடைத்து பணம் பறிபோகும்போதும்...

உன் பெயரில் கோவில் கட்டி.. தன் பெயரில் பல அடுக்குமாடி கட்டும்போதும்...

கறுப்புச் சட்டை திராவிடன் கைகொட்டி சிரிக்கும்போதும்

"ஏம்பா இவங்கள சாமி கண்ண குத்தல" என்று சிறு பிள்ளை கேட்கும்போதும்...

நினைக்கத்தான் தோன்றுகிறது... நீ எங்கு இருக்கிறாய் என்று !!!

2 comments:

  1. தனிய இதுக்குன்னு எல்லாம் வராது. நானும் நீயும் தான் கேட்கணும், போட்டு தள்ளனும். சாமி ஆகணும். இப்படி வந்தது தான் எல்லா சாமியும்.

    ReplyDelete
  2. அதான்.. எப்படா ஏதாவது விஷயம் சிக்கும்னு பாக்கறதே உன்ன மாதிரி நாத்திகனுக்கு வேலை!! இந்த மாதிரி யாராவது அபல குரல் குடுத்தா நிச்சயம் ஒரு அவதாரம் எடுத்து வருவார் கடவுள்... நீ ரொம்ப கற்பனை பண்ணிக்கவேணாம்.. முக்கியமா போட்டு தள்ள எல்லாம் எந்த சாமியும் வரல.. அமைதிய நிலைநாட்ட தான் வந்தாங்க!!

    ReplyDelete