Sunday, March 25, 2012

மரணம்...


வேண்டுபவருக்குக் கிடைப்பதில்லை

வாழ ஆசைப்படுபவரை விழுங்கி விடுகிறது ....

எந்த நொடியில் வரும் என்று மனிதனால் கணிக்க முடிந்தால்

கடவுளுக்கும் ஜோதிடனுக்கும் பூமியில் இடமில்லை .....

வரும் என்று தெரிந்தும் புகை பிடிப்பவன்

தள்ளாத வயதிலும் புகைக்கிறான்

தீயவை என்று அருகிலேயே செல்லாமல் இருப்பவன்

கடும் நோயினால் உயிரிழக்கிறான்....

அனைத்திற்கும் மேலே கணக்கு வைத்திருக்கிரானாம் ஒருவன்

தவறுகள் செய்பவன் சாகும்வரை அனுபவித்துத்தானே போகிறான்...

பின் என்னைச் சட்டியில் போடுவதால் என்ன பாடம் கிடைக்கின்றது?

இதைத்தான் காந்தி கணக்கு என்று நாத்திகர்கள் சொல்கின்றனரோ ???

No comments:

Post a Comment