மார்கழியின் முப்பது நாள் பனியும் குளிருமே முடிவதில்லை எங்களுக்கு
இருபத்திநான்கு மணி நேரமும் பனி மலைகளுக்கு நடுவே வாழ்க்கை உங்களுக்கு
முப்பது வயதில் லட்சங்களை ஈட்டும் எண்ணமே எங்களுக்கு
நாட்டைத் தவிர வேறு லட்சியமே இல்லாத எண்ணமே உங்களுக்கு
வீண் கௌரவத்திற்காக பெற்றவரிடமும் மற்றவரிடமும் சண்டை எங்களுக்கு
யார், ஏன், எதற்கு என்று கேள்விகளே இல்லாமல் சண்டை உங்களுக்கு
பணி உயர்வு பெற நண்பனையும் மிதித்து முன்னேறும் மனம் எங்களுக்கு
கடைசி மூச்சை சுவாசிக்கும் நொடியிலும் முன்பின் தெரியாத ஒருவரை காக்கும் மனம் உங்களுக்கு
இருக்கும் வரையில் இன்னும்..இன்னும்... என்று சேமித்துக் கொண்டே இருக்கும் மனம் எங்களுக்கு
இறந்தபின் உங்கள் குடும்பத்திற்கு "பதக்கமும்..பாராட்டுப் பத்திரமும்" சேமித்து வைக்கும் மனம் உங்களுக்கு
நாங்கள் சுயநலவாதிகள் தான்... எப்போதும்!
உங்கள் வீர தீர செயல்களைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைப்பது வருடத்தில் இருமுறை
அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் பணிந்து வேலை செய்யும் எங்களுக்கு அன்றும் இல்லை விடுமுறை
பிறப்பில் இந்தியனாக இருந்தாலும்... பணத்திற்காக...நாங்கள் சுயநலவாதிகள் தான்... எப்போதும்!
பெண்களை கண்டால் தயக்கம் எங்களுக்கு, தாக்கம் உங்களுக்கு.... ஏன் இந்த கொலைவெறி.. ஒழுக்கத்தின் அடையாளம் துளைந்து போனதோ?....
ReplyDeleteஒரு சில நண்பர்களுக்கு மட்டும் ஏன் இந்த கொலைவெறி...